நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.05) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களிலும் 100 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில், சில இடங்களில் 75 மி.மீ. க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.