மின்சார கட்டணங்கள் 2023 ஜூலை மாதத்திற்குள் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக குறித்த மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், 2022 டிசம்பரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்க, மின்சார செலவை பிரதிபலிக்கும் விலை நிர்ணயம் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டணம் ஆண்டுக்கு இருமுறை மீள்திருத்தம் செய்யபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.