தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து மருத்துவ சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் பரவும் காய்ச்சல், கொவிட் வைரஸின் புதிய மாறுபாடாக இருக்கலாம் என அஞ்சுவதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நோயின் தன்மையைப் பொறுத்து பல்வேறு மாறுபாடுகள் இருக்கலாம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும் விசேட நிபுணருமான வைத்திய வின்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நோய் தன்மையின் மாறுபாடுகள் குறித்து பகுப்பாய்வு செய்து அவற்றின் அறிக்கைகளை பெற வேண்டும் என்றும், இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அண்மைய காலமாக அதிக கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், எனினும் நாம் அச்சம் கொள்ள த்தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு வைரஸ் நோய்கள் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால், அவற்றை ஒருவருக்கொருவர் வேறுபடுத்துவது கடினம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம் எனவும் முக கவசங்களை முறையாக அணிவதை வழக்கப்படுத்திக்கொள்ளுமாறும் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.