முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவுக்கு பிணை!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் இவரை விடுவிக்க கோட்டை பதில் நீதவான் இலங்கசிங்க பண்டார இன்று (03.05) உத்தரவிட்டுள்ளார்.

2022 ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (அப்போதைய பிரதமர்) தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீரங்கா தீவிரமாகப் பங்கேற்றதாகவும், சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு உதவியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜே. ஸ்ரீ ரங்கா மீது குற்றம்சாட்டிஇருந்தனர்.

2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தின் சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version