ஈரான் குடியரசு 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புற்றுநோய் மருந்துகள் உட்பட அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஈரானிய தூதுவர் ஹாசிம் அஷிட் இந்த மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
புற்றுநோய், இதய நோய், சரும நோய், வைரஸ் தொற்றுகள், உயர் இரத்த அழுத்தம், போன்ற பல நோய்களுக்கான மருந்துகள் இந்த நன்கொடையில் உள்ளடங்குவாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இவ்வாறான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வது பெரும் நிம்மதி அளிப்பதாகவும், அதற்காக ஈரானிய மக்களுக்கும் ஈரான் குடியரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.