ஒரே நாளில் கொவிட் மரணங்கள் மூன்று பதிவாகியுள்ளன. நேற்று(06.05) இரவு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தகவலுக்கு அமைவாக கடந்த 05 ஆம் திகதி மூன்று மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை 08 பேர் நேற்று(06.05) புதிய தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் இருவர், கொழும்பு, நுகேகொட, மஹர கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த 81 வயதான பெண் எனவும், 80 வயதான ஆண் எனவும் இனம் காணப்பட்டுள்ளனர். குறித்த பெண் எந்தவித கொரோனா தடுப்பூசியையும் பெறவில்லை எனவும், ஆண் 01ஊசியை மட்டும் பெற்றவர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருபடைந்த கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளும் அதேவேளை, அவதானமாக செயற்படுவது உங்களுக்கு பாதுகாப்பை வழங்கும்.