வெள்ளை சீனியின் விலை அதிகரித்துள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுவரையில் 190 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை தற்போது 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் வெள்ளை சீனியின் விலை 500 டொலர்களில் இருந்து 750 டொலர்களாக அதிகரித்துள்ளமையே வெள்ளை சீனியின் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.