இளம் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, அதன் அறிக்கை கிடைப்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சிறுமியின் உடல் உறுப்பின் பகுதிகள் உடற்கூற்று பரிசோதகரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் மிக மோசமானது எனவும், அமலாக்கத்தால் மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில்லை மாறாக இளம் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது என்பதையும் குறிப்பாக இளம் பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் அதிகம் அவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாதுகாவலர்கள், இளம் பிள்ளைகளின் பெற்றோர்கள், குறிப்பாக பிள்ளைகள் எந்த வகையான நபர்களுடன் பழகுகிறார்கள்? அவர்களது நட்பு வட்டாரம் தொடர்பில் அறிந்திருந்தால், அவை குறித்து கவனமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், துஷ்பிரயோகம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு அழைப்பதன் மூலமும் தகவல் வழங்க முடியும் எனவும் உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணிநேர தொலைபேசி இலக்கமான 1929 க்கு அழைத்தும் தகவல் வழங்க முடியும் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterReddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version