பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்து தொடர்பில் தொடரப்பட்டிருந்து வழக்கிற்காக நீதிமன்றத்தில் இஸ்லாமாபாத் முன்னிலையான சந்தர்ப்பத்திலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பிரதமராக பதவி வகித்த காலத்தில் வெளிநாட்டு இராஜதந்திர பயணங்களின் போது பெற்ற பரிசுகள் மற்றும் மானியங்களை குறைத்து மதிப்பிட்டு காட்டியிருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் மீண்டும் கைதாகியிருப்பது, சர்வதேச ரீதியில் பேசுபொருளாக அமைந்துள்ளது.