நாட்டில் இக்கட்டான சூழ்நிலைக்கு அதிகம் முகம்கொடுத்தது சிறுவர்களே – எதிர்க்கட்சி தலைவர்!

கடந்த காலங்களில் நாட்டில் பரவிய கடுமையான கொவிட் தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் நீண்டகால விளைவாக, இந்நாட்டில் கல்வி கற்கும் சிறுவர்களின் சுகாதார நிலை மோசமடைந்துள்ளது. உண்மையில், நம் நாட்டின் சிறுவர்கள் ஒரே நேரத்தில் இரட்டை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சனத்தொகையில் மேலும் 2.5 மில்லியன் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது இந்நாட்டில் பிள்ளைகளின் போஷாக்குக் குறைபாட்டை மேலும் அதிகரிக்கும்.

இதன் காரணமாக,குறிப்பாக குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை மீட்பதற்கு தலைமைத்துவத்தை வழங்குவது கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்.இது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இதன் பிரகாரம்,இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்றைய (09.05) சபை அமர்வில் அரசாங்கத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version