மறைந்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் இன் நடிப்பில் வெளியான ”MS DHONI THE UNTOLD STORY” திரைப்படம் மீண்டும் திரையிடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிவூட் நடிகர் சுஷாந்த் சிங் தனது நடிப்பினால், இயல்பான சாந்த சுபாவத்தினாலும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துகொண்டவர், எனினும் திரைத்துறையில் காணப்படும் வாரிசுவழி சிபாரிசுகளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் காரணமாக திறமையிருந்தும் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிக வாய்ப்புகள் அவருக்கு கை நழுவியது.
”MS DHONI THE UNTOLD STORY” படத்திற்கு பிறகு சுஷாந்த் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. அவரது வாழ்வை வெற்றி பக்கத்திற்கு திருப்பியது எனினும் அந்த நிலை தொடரவில்லை.
கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் மாதம், சுஷாந்த் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. அவரது வீட்டிலிருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் இது வரையில் தீர்வுகள் வரவில்லை. சுஷாந்தின் மரணம் பாலிவுட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும், ரசிகர்களின் மனதில் என்றும் அழியாமல் இருக்கும் சுஷாந்த் உலக அளவில் இன்னும் பேசப்பட்டு வருகிறார். சுஷாந்தின் வாழ்வில் வெற்றியை கொண்டு வந்த “MS DHONI THE UNTOLD STORY”. திரைப்படம் இந்திய திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.
“MS DHONI THE UNTOLD STORY” திரைப்படம் வரும் 12ம் திகதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.