தொடர் மழையினால் ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு!

பல பிரதேசங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அத்தனகலுஓயா, களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை வெள்ள அபாயம் இல்லையென்ற போதிலும், தற்போதைய மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்றும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply