வவுனியாவில் நேற்று இரவு (12.05.2023) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,
நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேப்பங்குளம் பகுதியிலே நாய் உடன் மோதுன்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் மகாறம்பைக்குளத்தை சேர்ந்த டனுஜன் (வயது 20) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
