மோகா புயல் குறித்து அவதானமாக செயற்படுமாறு மீன் பிடி படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15.05) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கில் வங்காள விரிகுடாவிற்கு அருகே நேற்று (14.05), நிலைகொண்டிருந்த “மோகா” புயல் தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைக்கு அருகே பிற்பகல் வேளையில் கரையை கடந்துள்ளது.
எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15.05) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் வானிலை நிலவும் போது, பலத்த காற்று வீசக்கூடிய சந்தர்ப்பங்களிலும், மின்னல் தாக்கங்கள் தொடர்பிலும் அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.