நகரப்பகுதியில் சடலம் மீட்பு!

வவுனியா நகரப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக சடலம் ஒன்று கிடப்பதாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படாதநிலையில் அந்த பகுதியில் இருக்கும் ஆதரவற்ற ஒருவராக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் அறியப்படாதநிலையில் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version