லங்கா சதொச நிறுவனம் சீனி மற்றும் பால்மாவுக்கான விலைகளை குறைந்திருப்பதாக அறிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 243 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1080 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விலை குறைப்பு இன்று (15.05) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.