WhatsApp இல் Chat lock செய்யும் புதிய வசதி!

Chatகளை Lock செய்ய பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை WhatsApp இல் Meta நிறுவனம் அறிவித்துள்ளது. கடவுச்சொல் அல்லது கைரேகை ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இதனை Lock செய்ய முடியும் என அறிவித்துள்ளது.

Chat Lock செய்யபட்டவுடன், அது ஒரு தனி பகுதியில் சேமிக்கப்படும், மேலும் குறித்த Chat இன் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கம் மறைக்கப்படும். Lock செய்யபட்ட Chat ஐ மீண்டும் அணுக, பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை அல்லது அவர்களின் கைரேகையை உள்ளீடு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சமானது சில உரையாடல்களை ரகசியமாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமையை வழங்குவதாக அமைந்துள்ளது. உரிமையாளரின் அனுமதியின்றி எவரேனும் தொலைபேசியை அணுகினாலும், Lock செய்யபட்ட Chat ஐ அணுக முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சத்தைப் பற்றிய மேலதிக விபரங்கள்:

  • பயனர்களின் தனிப்பட்ட Chatகள் மற்றும் Group Chatகளை Lock செய்ய முடியும்.
  • கடவுச்சொல் அல்லது கைரேகை மூலம் மட்டுமே அணுகக்கூடிய வகையில் இவை தனி பகுதியில் சேமிக்கப்படும்.
  • Lock செய்யப்பட்ட Chatகளின் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கம் Notifications இல் மறைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டு.
  • Lock செய்யப்பட்ட Chatகளை அணுக, பயனர்கள் தங்கள் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும் அல்லது கைரேகையை பயன்படுத்த வேண்டும்.

இந்த புதிய அம்சம் WhatsApp க்குரிய சிறப்பம்சமாக அமைவதுடன், பயனர்களின் மிக முக்கியமான உரையாடல்களுக்கு கூடுதல் தனியுரிமையை வழங்கும் ஒன்றாக அமையும் என்பதில் ஐயமில்லை என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version