தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்திப் பவனி நேற்று (15.05) மதியம் வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்தது.
கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் வாகன ஊர்தியானது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக சென்று மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி மலர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் மாவட்டத்தின் கிராம பகுதிகளுக்கு பவனி சென்றது.