ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாளை (17.05) இந்தியாவின் மும்பைக்கு பயணமாகவுள்ளனர்.
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமிழர்களின் வகிபாகமும் இந்தியாவின் பாதுகாப்பும் எனும் தலைப்பில் இடம்பெறவுள்ள கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காவே இவர்கள் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த சில மாதங்களில் ஜனநாயக போராளிகள் கட்சி பல தடவைகள் இந்தியாவிற்கு பயணமாக இந்தியவின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன் அதன் தொடர்ச்சியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு கடும் பங்களிப்பையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.