நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில், பிரபல நடிகர்களான கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர்.
சூப்பர் ஸ்டாரின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் 170-வது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளதாகவும், லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னரே தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விக்ரம் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த அறிவிப்பு, ரஜினி ராசிகளையும் விக்ரம் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.