அண்மைய காலமாக வேகமாக பரவி வரும் காய்ச்சலுக்கு பராசிட்டமோல் தவிர்ந்த ஏனைய வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தில் அலட்சியமாக செயற்பட்டால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் போது வைத்தியர்களும் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் விசேட வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.