ஐயனார் தொடர் – செவ்வானம் சம்பியன்

ஐயனார் விளையாட்டு கழகம் நடாந்திவரும் 05 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட கடினப்பந்து போட்டி தொடரின் 2023 ஆம் ஆண்டுக்கான தொடரின் இறுதி நிகழ்வு நேற்று (21.05) இடம்பெற்றது.

34 அணிகள் பங்குகொண்ட குறித்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் செவ்வானம் மற்றும் பிரன்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

இவ் இறுதியாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரண்ட்ஸ் அணி 05 ஓவர் முடிவில் 04 விக்கெட்களை இழந்து 43 ரன்களை பெற்றுக்கொண்டது. 44 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய செவ்வானம் அணி 4.2 ஓவர் முடிவில் 03 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

வெற்றிபெற்ற செவ்வானம் அணியினருக்கு சம்பியன் கிண்ணமும், இரண்டாம் இடத்தை பெற்ற பிரன்ட்ஸ் அணிக்கான கிண்ணமும் வழங்கப்பட்டதுடன், இறுதி போட்டியில் பங்கேற்ற வீரர்களிற்கு பதக்கங்களும் பிரதம விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டன.

ஐயனார் விளையாட்டு கழக தலைவர் பே. அன்ஜன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேமமடு சண்முகாநந்தா வித்தியாலய அதிபர் க. கணேசலிங்கம், வடமாகாண துடுப்பாட்ட சங்க தலைவர் யோ. ரதீபன், சிரேஸ்ட ஊடகவியலாளர் ந. கபிலநாத் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

Social Share

Leave a Reply