இவ்வாண்டின் இது வரையான காலத்தில் அதிகபட்ச தினசரி COVID-19 தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை (20.05) பதிவாகியுள்ளது. இதன்படி அன்றைய தினம் 15 தொற்றாளர்கள் மற்றும் மூன்று COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவின் தினசரி கொரோனா அறிக்கையின்படி, புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆகவும், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் பதிவாகியுள்ளதுடன், மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை 16,864 ஆக அதிகரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, தொற்றுநோய் ஆரம்பித்ததிலிருந்து பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கை தற்போது 231 நாடுகளில் 80 இடத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலைமை குறித்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட சுகாதார அதிகாரி, இந்த COVID-19 நிலைமை ஆபத்தானது அல்ல எனவும் மக்கள் வீண் அச்சம் கொள்ள தெரிவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய தொற்றாளர்கள் எப்பொழுதும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், நிலைமை தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மூலம் பாரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.