வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க பணம் பெறும் இடைத் தரகர்கள் அதிகரிப்பு!

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

வரிசைகளில் காத்திருக்காமல் உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து 5000 ரூபாய் தொடக்கம் 25 ஆயிரம் ரூபாய் வரை இடைத் தரகர்கள் பெற்றுக்கின்னர்.

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி வரிசையினை பெற்றுக்கொடுப்பதற்கு 5000 ரூபாவும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் அறிந்திருந்தும் மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயற்படாது இருப்பது தொடர்பில் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளமையுடன் தலைமை அதிகாரிகளாவது இவ்விடயத்தில் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலமையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பொது மலசலகூடமின்மை, கடவுச்சீட்டு பெற காத்திருக்கும் இடத்தில் நிழல் தரும் வகையில் ஒரு கூடாரம் கூட இல்லை போன்ற குற்றச்சாட்டுகளையும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version