பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு வரும் வரை பதில் நிதியமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்புவர் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.