ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமியை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர்.

யாழ்.முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் புலோலி, ஹம்பசிட்டி பகுதியில் நேற்று (22.05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 05 கிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply