கொவிட் -19 புதிய திரிபு தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அடுத்த உலகளாவிய தொற்றுநோய்க்கு தயாராக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது.

முன்னர் இருந்ததை விட புதிய தொற்று ஆபத்தானது என இந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரேயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் -19 தொடர்பான உலகளாவிய அவசரநிலை தற்போது முடிவுக்கு வந்தாலும், கொவிட் காரணமாக உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மேலும் ஒரு வித்தியாசமான திரிபு வெளிப்படுவதாகவும், இதன் புதிய தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் டெட்ரோஸ் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் 76வது உலக சுகாதார பேரவையில் தனது அறிக்கையை முன்வைக்கும் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் நிலைமையை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply