ஜப்பானில் இடம்பெற்றுள்ள தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாகானோவில் உள்ள உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் கூர்மையான ஆயுதம் மற்றும் வேட்டையாடும் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.