ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டோக்கியோ மற்றும் கிழக்கு ஜப்பானின் சில பகுதிகளில் இன்று (26.05) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளதாகவும், ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.1 ரிக்டர் அளவில் பதிவான குறித்த நிலநடுக்கம் சிபா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் 44.5 கிலோமீட்டர் (28 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிகளில் ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மற்றும் டோக்கியோவுக்கான சர்வதேச நுழைவாயிலான நரிடா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோவில் உள்ள மக்கள் அதிர்வை உணர்ந்ததாகவும், குறித்த நிலநடுக்கம் ஏற்பட சில நிமிடங்களுக்கு முன்பு, எச்சரிக்கை அமைப்பு ஒன்று முன்கூட்டியே இதனை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது ஜப்பானில் இருப்பதால், ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே, “தான் இந்த நிலநடுக்கத்தை நேரில் அனுபவித்ததாகவும், நிச்சயமாக இதற்கு முன் இந்த அளவு எதையும் உணர்ந்ததில்லை” எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply