ஒவ்வொரு வெள்ளியும் டெங்கு ஒழிப்பு துப்புரவு திட்டம்!

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும், பாடசாலைகளிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பாடசாலைகளில் 60% டெங்கு நுளம்புகள் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 37,209 எனவும் அதில் அதிகளவானோர் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களைத் தேடி வீடுகள் மற்றும் நிறுவனங்களை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார திணைக்களம் தொடர்ந்து ஆய்வு செய்யும் எனவும், மேலும் க.போ.த சாதாரணதர பரீட்சைகள் நடைபெறவுள்ள பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரீட்சை நிலையங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட வழிகாட்டுதல்களை வெளியிட தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

Social Share

Leave a Reply