வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது இடைநிறுத்தம்!

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல்கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளதன் காரணமாக, 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமேற்கு மாகாண பதில் பணிப்பாளர் பி.சி.எஸ். பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய பகுதிகளில் உள்ள கால்நடைகள் இடையே இந்நோய் பரவி வருகின்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply