என்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும்!

தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பொய்யான அறிக்கைகளை வெளியிட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் அழைக்குமாறு சபாநாயகரிடம் தாம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது தொடர்பான பொய்யான செய்திகளை வெளியிட்டதன் மூலம் தனது பாராளுமன்ற சிறப்புரிமைகளை மீறியதாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை உள்ளடக்கிய உள்நாட்டு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு எதிராக அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பல செய்தி இணையதளங்கள் சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பகிர்வதாகவும் பரப்புவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version