ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ODI தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பின்வரும் 16 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி ஹம்பாந்தோட்டையில் உள்ள MRICS மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி
1) தசுன் ஷனக – கேப்டன்
2) பாத்தும் நிஸ்ஸங்க
3) திமுத் கருணாரத்ன
4) குசல் மெண்டிஸ் (WK) – துணை கேப்டன்
5) ஏஞ்சலோ மேத்யூஸ்
6) சரித் அசலங்க
7) தனஞ்சய டி சில்வா
8) சதீர சமரவிக்ரம – (WK)
9) சாமிக்க கருணாரத்ன
10) துஷான் ஹேமந்த
11) வனிந்து ஹசரங்க
12) லஹிரு குமார
13) துஷ்மந்த சமீர
14) கசுன் ராஜித
15) மதீஷ பத்திரன
16) மகேஷ் தீக்ஷனா
வனிந்து ஹசரங்க தற்போது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிகிச்சை பெற்று வருவதுடன், சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் விளையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குசல் ஜனித் பெரேரா இலங்கையின் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட காயத்தைத் சிகிச்சை பெற்று வருவதால், அவர் ஒருநாள் தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.