இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்த சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு!

இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன், தென்னிந்தியாவின் உலகப் புகழ்பெற்ற நடிகரான பத்ம பூஷன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் கடந்த (29.05) அன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இலங்கை விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா துறையின் மேம்பாட்டுக்கு சூப்பர் ஸ்டாரின் இலங்கை வருகை மிகவும் பலமாக அமையும் எனவும், அவரது ரசிகர்கர்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையிலுள்ள, திருத்தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க விகாரைகள் என பல இடங்களுக்கும் ஆன்மீக சுற்றுப்பயணகளை மேற்கொள்ளவும் சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version