எரிபொருள் விலை நேற்று (31.05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 318 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை மண்ணெண்ணெய்யின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.
மேலும், இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய்யின் விலையை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 270 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஒக்டேன் 95 யூரோ 4 ரக எரிபொருள் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒக்டேன் 95 யூரோ 4 ரக எரிபொருள் லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபாவாகும்.
அத்துடன் லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 ரக எரிபொருள் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதன் புதிய விலை 340 ரூபாவாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.