ஒரு வாரத்திற்குள் உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உள்ளூர் சந்தையில் கோழி இறைச்சியின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பிலும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.