வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடித்திரிந்த 26 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டது.
நேற்றயதினம் (01.06) இரவு வவுனியா பண்டாரிக்குளம் மற்றும், வைரவர்புளியங்குளம் ஆகிய பகுதிகிளில் இருந்து குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை நகரசபைக்கு செலுத்தி அவற்றை மீளவும் பெற்றுக்கொள்ளமுடியும் என நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
