வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவுவை முன்னிட்டு 18 ஆவது ஆண்டாக நடாத்தும் விளையாட்டு விழா இன்று (03.06) இடம்பெற்றது.
வட மாகாண ஆளுனர் திருமதி பி. எம். எஸ். சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த இந் நிகழ்வில் 65 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சைக்கிள ஓட்டப்போட்டி ஆளுனரால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி யில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
