புற்றுநோய் வைத்தியசாலையில் தானியங்கி தடுப்பூசி இயந்திரம் செயலிழப்பு!

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நான்கு கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும் கதிரியக்க SDG மருந்தை உட்செலுத்துவதற்கு, சிகிச்சை சேவைகளை மேற்கொள்ளும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரமே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியதுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தானியங்கி தடுப்பூசி இயந்திரத்திற்கு பயன்படுத்தப்படும் வடிகுழாய்கள் தீர்ந்து விட்டதன் காரணமாகவே அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
தேவையான வடிகுழாய்களை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் இல்லை என்பதே இதற்கான பிரதான காரணம் எனவும் அரச கதிரியக்க தொழிநுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version