மூன்று மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலக பிரிவு, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, அகலவத்தை மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்கள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version