இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா மீட்பு!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சுல்லுருபேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 240 கிலோ கஞ்சா ஆந்திர பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் அத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன், அனகாப்பள்ளியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட கஞ்சா சூலூர்பேட்டையில் பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து ஒரு லொரி, கார் மற்றும் 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் பின்னணியில் பிரபல நடிகர்களும் தொடர்புபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் மீது ஆந்திரா மற்றும் தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version