சக மாணவர் ஒருவரை தாக்கிய மாணவர்கள் கைது!

சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சக மாணவர் ஒருவரை கிரிக்கெட் விக்கெட் ஸ்டம்புகளால் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (06 .06) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version