சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவுநாள் அனுஸ்டிப்பு!

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் நேற்று (11.06) வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

சிவசேனை மற்றும் கற்குளம் மகாவிஷணு ஆலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வு மகாவிஸ்ணு ஆலய நீர் தடாகத்தில் இடம்பெற்றது.

தமிழில் மந்திரமோதி மோட்ச அர்ச்சனை செய்யப்பட்ட இவ் அஞ்சலி நிகழ்வில் சிவசேனை அமைப்பின் வவுனியா அமைப்பாளர் தமிழ்திரு அ. மாதவன் உட்பட கிராமத்தவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவுநாள் அனுஸ்டிப்பு!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version