ரயில் விபத்தில் பலியான ரதெல்ல தமிழ் வித்தியாலயத்தின் அதிபர்!

தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் நேற்றைய தினம் (11.06) ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை கல்கந்த வத்த பகுதியைச் சேர்ந்த, ரதெல்ல தமிழ் வித்தியாலய பாடசாலையின் அதிபரான கதிர்வேல் சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (12.06) பாடசாலை கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் பாடசாலை சுத்தப்படுத்தும் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வங்கிஓயா தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் உடரதல்ல தமிழ் வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version