சிம்பாவேயில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு நேர்ந்தது என்ன?

சிம்பாப்வே சுற்றுப்பயணத்தின்போது தங்குமிட வசதிகளை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதனை தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியினர் சிம்பாப்வே வந்தடைந்த பின்னர், அவர்கள் தங்க வேண்டிய விடுதி நுழைவாயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 03 மணிநேரம் காத்திருக்க நேரிட்டுள்ளதாகவும், முறையான தங்குமிட வசதி ஏற்பாடு செய்யாததே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல கருத்துகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், மற்றுமொரு அணி குறித்த விடுதிக்கு வருகைதந்து இருந்ததுடன் அவர்களுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதால், இலங்கை அணிக்கான ஏற்பாடுகள் சற்று தாமதமாகியதாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பாவேயில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு நேர்ந்தது என்ன?

Social Share

Leave a Reply