கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய் மேல் மாகாணத்திலும் பரவும் அபாயம்!

கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய் மேல் மாகாணத்திலும் பரவி வருவதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு முன்னரே அறிவித்திருந்தது.

குறித்த சிக்கல் தொடர்ந்தால் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இது பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோயாக மாறி வருவதால், அதனை தடுக்க தடுப்பூசி போட வேண்டும் எனவும் இந்த தோல் நோயைக் கட்டுப்படுத்த மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா போன்ற அதிக பால் உற்பத்தி செய்யும் பகுதிகளிலும் இந்த தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply