மேல் மாகாணத்தில் மூன்று நாள் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் பங்களிப்புடன் இந்த வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இது வரையான காலப்பகுதியில் இலங்கையில் 43,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 21,654 தொற்றாளர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.