ஓமல்பே சோபித்த தேரர் தலைமையில் இயங்கும் இரண்டு விகாரைகளில் மின் கட்டணம் செலுத்தாமை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாந்தோட்டையில் உள்ள சிறிபோபுர ஸ்ரீ தர்மசிங்கராம மற்றும் உதுவான்கந்தவிலுள்ள ஸ்ரீ தர்மதூத யோகஸ்ரம விகாரைகளிலேயே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ தர்மதூத யோகஸ்ரமம் விகாரையின் மின் கட்டணம் 94,000 ரூபாய் எனவும் சிறிபோபுர ஸ்ரீ தர்மசிங்கராம விகாரையின் மின் கட்டணம் 22,872ரூபாய் எனவும் குறித்த தொகை செலுத்தபடாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதிய வருமானம் இன்மையால் மின்கட்டணம் செலுத்தமுடியாமல் சிரமப்படுவதாக ஓமல்பே சோபித தேரர் கருத்து தெரிவித்துள்ளார்.