இலங்கையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த 04 மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.