பல வருடங்கள் கடந்து மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய ராமராஜன்!

90களில் கமல், ரஜினி படங்களை தாண்டி அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்த படங்களாக ராமராஜனின் படங்கள் இருந்தது.

ஆனால் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராமராஜன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.  இந்நிலையில் கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ராமராஜன் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுத்தார்.

இப்போது சாமானியன் படத்தை தொடர்ந்து ராமராஜனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதன்படி அறிமுக இயக்குனர் கார்த்திக் குமார் இயக்கத்தில் 46 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக 46 வயது  நடிகையான  மீனாவை இந்த படத்தில் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறார்களாம். ராமராஜன் இளவயதில் ஹீரோவாக நடித்த போது கூட மீனாவுடன் ஜோடி போட்டதில்லை. ஆனால் இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version